எம்.எஸ்.அகர்வால் வார்ப்பகம் குறித்து ஒரு கண்ணோட்டம்
கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக ஸ்டீல் தொழில்நுட்பத்தில் நாங்கள் முன்னோடிகளாக இருந்து வருகிறோம். புதிய ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் ஸ்டீல் தொழில் துறையில் நாங்கள் உயர்ந்த நிலையில் இருந்து வருகிறோம்
எங்கள் உறுதியான அடித்தளம்
2005ம் ஆண்டில் தொடங்கப்பட்டு தென்னிந்தியாவில் மதிப்பு கூட்டப்பட்ட மற்றும் உயர்தரமான ஸ்டீல் தயாரிப்புகளை உற்பத்தி செய்வதில் நாங்கள் முன்னணியில் இருக்கிறோம். ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் இருக்கும் தொழிற்சாலைகளில் நாங்கள் 150000 MTPA கொள்திறன் கொண்ட உற்பத்தி ஆலைகளை கொண்டுள்ளோம். தற்பொழுது எங்கள் உற்பத்தி திட்டங்களை மேன்மைப்படுத்துவதன் மூலம் 2020ம் ஆண்டில் 250000 MTPA கொள்ளளவை அடைந்துவிடுவோம் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
சிறப்பான எதிர்காலத்தை நோக்கி
சிறப்பான மாற்றத்தை கொண்டுவருவதன் மூலமும் உயர்ந்த தரத்தை கையாள்வதன் மூலமும் ஸ்டீல் உற்பத்தியில் நாங்கள் புரட்சிகரமான மாற்றத்தை நிகழ்த்த உள்ளோம்
2005ம் ஆண்டு முதல் கட்டிட தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வந்துள்ளோம்
2005ல் தொடங்கப்பட்ட எங்கள் நிறுவனம் கடந்த ஆண்டுகளில் ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்டீல் தொழிற்சாலையாக வளர்ந்து வந்துள்ளது. ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் சர்வதேச தரத்திலான மூன்று தொழிற்சாலைகள் 850 ஏக்கர் பரப்பளவில் 150000 MTPA கொள்திறன் கொண்டு பரந்து விரிந்துள்ளது. புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பத்தினை மையமாகக் கொண்டதன் மூலம் 2020ல் 250000 MTPA என்ற உச்சத்தை எட்டவுள்ளோம். இதன் காரணமாக தென்னிந்தியாவின் முதல் ஸ்டீல் நிறுவனமாக 500, 550 மற்றும் 600 தரத்திலான இரும்பு கம்பிகளை தயாரித்து உள்ளோம்.
தற்சமயம் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக இருந்து 750க்கும் மேற்பட்ட Channel Partners மற்றும் 100+ பிரத்தியோக விநியோகஸ்தர்களைக்கொண்டு செயல்படுகிறது எங்கள் நிறுவனம். பல ஆண்டுகளாக நல்ல தரம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான நன்மதிப்பைப் பெற்றுள்ளது. இதன் காரணமாக ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம், பெங்களூர் சர்வதேச விமான நிலையம் மற்றும் கிருஷ்ணபட்டணம் துறைமுகம் போன்ற நாட்டின் சர்வதேச தரத்திற்கு நிகரான முதன்மையான திட்டங்களில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவின் தலைசிறந்த ஸ்டீல் நிறுவனமான நாங்கள், கட்டிட தொழில்நுட்பத்தை முன்னேற்ற முழு பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளோம் என்பதில் ஐயமில்லை.