வணிகத்திற்கு அப்பாற்பட்ட

நாங்கள் மனிதநேயத்துடன் செயல்படுவதில் முழு நம்பிக்கைக் கொண்டுள்ளோம். இதற்காக எங்களால் இயன்ற சிறிய முயற்சிகளை மேற்கொண்டு, சமூகத்திற்கு சேவை செய்ய கடமைப்பட்டுள்ளோம்.

எங்கள் முயற்சிகள்:

ஒவ்வொரு டன் விற்பனைக்கும் ஒரு வேளை ஒருவருக்கு உணவளித்தல்
நாங்கள் விற்பனை செய்யும் ஒவ்வொரு டன் ஸ்டீல் பொருட்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஊட்டச்சத்துமிக்க, முழுமையான உணவை வழங்குகிறோம்.

தென்னிந்தியாவில் தற்பொழுது நாங்கள் 6000 மீல்ஸ் (சாப்பாடுகள்) வரை அளித்துவருகிறோம். பல அநாதை விடுதிகள்,சிறப்பு தேவைகள் கொண்ட பிள்ளைகளுக்கான பள்ளிகள், முதியோர் இல்லங்கள், மற்றும் ஸ்ரீ சாய் நித்ய அன்ன சேவா மற்றும் ISKCON ஆகியோரின் மூலம் இதனை நிறைவேற்றுகிறோம்.

எங்கள் டீலர்கள் பலரும் பணம் மற்றும் பொருட்கள் (மின்விசிறிகள், நீரசுத்திகரிப்பு இயந்திரங்கள், மளிகை சாமான்கள்) அளித்து தங்களால் இயன்றவரை சேவை செய்கிறார்கள்.

The Devnar School எங்களால் பயன்பெரும் ஒரு பள்ளிக்கூடம் ஆகும். மேலும் பல உயிர்களுக்கு எங்கள் சேவையை விரிவாக்கப்படுத்த உள்ளோம்.

மருத்துவ துறையில் எங்களது ஒரு சிறிய முயற்சி - மருத்துவ மற்றும் இரத்ததான முகாம்கள்

ஒவ்வொரு வருடமும் நாங்கள் எங்கள் தொழிற்சாலையில் கண் பரிசோதனை உட்பட பல மருத்துவ முகாம்களை நடத்துகிறோம். பெண்களுக்கான பிரத்யேக மருத்துவ முகாம்கள் நடத்தி பெண்கள் நல மேம்பாட்டை உறுதியளிக்கிறோம். கடந்த வருடம் 10-15 முறை இதுபோன்ற முகாம்கள் எங்கள் தொழிற்சாலையில் நடத்தப்பட்டன. எங்கள் பணியாளர்களுக்கான மருத்துவ சேவையை பூர்த்தி செய்ய நாங்கள் ஆன் கால் என்ற அமைப்புடன் இணைந்து பணியாற்றுகிறோம். செயின்ட் தெரேசா ஆஸ்பிடல் Blood Bank மூலமாக நாங்கள் இரத்ததான முகாம்கள் நடத்துவதுடன் எங்கள் பணியாளர்களையும் பங்கேற்கச் செய்கிறோம்.

மேஸ்திரிகளுக்கான மருத்துவ முகாம்கள் நடத்துவதன் மூலம் அவர்களின் ஆரோக்கியம் மற்றும் மேம்பாட்டை உறுதிசெய்கிறோம். இதில் முழு உடல் பரிசோதனைகள் மற்றும் கண் பரிசோதனைகளும் அடங்கும்

இதனால் இந்த சேவைகளின் மூலம் வணிகத்திற்கு அப்பாற்பட்ட உறவை எங்கள் பணியாளர்களுடன் நாங்கள் பகிர்ந்துகொள்கிறோம்.