வேலை வாய்ப்புகள்

ல் ஒரு அங்கத்தினராக அமைவதன் அடையாளம்

எம் எஸ் லைஃப் ஸ்டீல் இன் தொழில் வளர்ச்சியில் ஒரு அங்கத்தினராக அமைவதன் மூலம் உங்கள் உண்மை தனித்தன்மை வெளிப்படுகிறது. தொழில் வளர்ச்சியின் ஒவ்வொரு படியிலும் உங்களுக்கு தேவையான பயிற்சியும் வழிகாட்டுதலும் வழங்கப்பட்டு நீங்கள் மேலும் வளர்ச்சியடைய வழிவகுக்கிறது. பணியாளர் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் M S Life Steel, 5S திறன் மேம்பாட்டு திட்டத்தினால் உங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, சர்வதேச தரத்திற்கு நிகராக உங்களை மேம்படுத்துகிறது. 5S ஒரு உற்பத்தித் திறன் கருவி. உங்கள் உற்பத்தித் திறனை மிக குறைந்த கால அளவில் மேம்படுத்துகிறது.
மேற்படி நடைமுறைகளை பழக்கத்தில் கொண்டு வந்து தக்க வைத்து கொள்ளுதல்
நாங்கள் உற்சாகமான மற்றும் தகுதியுள்ள நபர்களை எங்கள் வணிகத்தில் சேர்த்துக்கொள்ள ஆவலாக இருக்கிறோம்

எம் எஸ் லைஃப் உடன் சேர்ந்திருத்தல்

கண்டுபிடிப்பு சார்ந்த வேகமாக வளர்ந்து வரும் எங்கள் நிறுவனத்தில், திறமையான வல்லுனர்களுடன் சேர்ந்து பணி செய்ய, வளர்ச்சி பெற பங்கேற்றிடுங்கள்

தற்போதைய வாய்ப்புகள்

வணிக மேம்பட்டு மேலாளர்
• முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை விற்பனை இலக்கை அடைவதற்கு பொறுப்பேற்று ஒதுக்கப்பட்ட பிரதேசத்திற்கான, channel மேலாண்மை மற்றும் மார்க்கெட்டிங் பணிகளை மேற்கொள்ளுதல் • வணிக அபிவிருத்தி மேலாளராக வணிக திட்டத்தை உருகாக்கி, உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தின் பட்ஜெட்டினை வகுத்து, விற்பனை இலக்கை அடைய வேண்டும். டீலர்கள் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர்களின் வலைப்பின்னலை மேம்படுத்தி, உயர்த்தி, குறிப்பிட்டப்பட்டுள்ள விற்பனை அளவை எட்டி, பலவாறு பொருட்களின் லாபத்தை பெருக்க வேண்டும். உங்கள் குழுவினை உற்சாகப்படுத்தி புதிய சில்லறை வியாபாரங்களை ஏற்படுத்த வேண்டும். • விற்பனை அதிகாரிகள் மற்றும் விற்பனை மேலாளர்களின் மீது சூழல் மேற்பார்வை ஏற்படுத்தி சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனையை மேம்படுத்துதல் ஆகிய விற்பனை இலக்கை அடைவதற்கான மேற்பார்வையை, மேலாளராக நீங்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். • வணிக திட்டம் மற்றும் பட்ஜெட்டை உருவாக்கவேண்டும். • உங்கள் கீழ் வரும் பகுதிகளில், நிறுவனத்தின் விற்பனை கொள்கைகளை அமல்படுத்துதல் • விற்பனையை ஏற்படுத்தி, வருடாந்திர விற்பனை இலக்கை, விற்பனை நிர்வாகிகள், அதிகாரிகள் மற்றும் விநியோகஸ்தர்கள் மூலம் அடைந்திடல் • வளங்களை முறையாக உபயோகித்து, குறிப்பிட்ட பகுதிகளில் கண்காணித்தும், கட்டுப்படுத்தியும், விற்பனையை மேம்படுத்துதல் • சந்தையின் புதிய போக்குகள் மற்றும் புதிய வாய்ப்புகளை, முறையான சந்தை பிரயாணங்களின் மூலம் புரிந்துகொள்ளுதல் மற்றும் புதிய உத்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைதல் • டீலர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் வலைப்பின்னலை ஏற்படுத்தி பராமரிப்பதன் மூலம், புதிய மற்றும் நவீன பொருட்கள் குறித்த செய்திகளை தெரியப்படுத்தி, குறிப்பிட்ட பகுதிகளில் அந்த பொருட்கள் கிடைக்கப் பெறுமாறு உறுதியளித்தல் • Ensure Merchandising – மார்காம் திட்டத்தை செயல்படுத்துவதற்கு வணிகமயமாக்கல் மற்றும் விளம்பரங்கள் உள்ளன என்பதை உறுதிப்படுத்தவும். • ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கான சந்தைப்படுத்தல் தொடர்பு மற்றும் விற்பனை மேம்பாட்டை செயல்படுத்தவும் மதிப்பீடு செய்தல் • விற்பனை நடவடிக்கைகள், விற்பனை அணிகளுக்கு ஒதுக்கி மற்றும் ஊக்குவித்து அவர்களின் செயல்திறனை மேம்படுத்த உதவிசெய்தல் • போட்டியாளர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து வணிக மேலாளரிடம் அறிக்கை சமர்ப்பித்தல்
வணிக மேம்பட்டு அதிகாரி
• அந்தந்த மாநிலங்களுக்கான முதன்மை மற்றும் இரண்டாம் நிலை வணிக இலக்கை அடைவதும், channel மேலாண்மை மற்றும் மார்க்கம் பணிகளை மேற்கொள்வதும் உங்கள் கடமை • வணிக மேம்பட்டு அதிகாரியாக நீங்கள் விற்பனை அதிகாரிகளுடன் கலந்து வணிக இலக்கை அடைவதுடன் விநியோகஸ்தர்கள், டீலர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகளுடன் உங்கள் தொடர்பு வலையை ஏற்படுத்தி பராமரிக்க வேண்டும் • விற்பனை உத்திகளையும், விற்பனை மேம்பாடுகளையும் செயல்படுத்தவேண்டும். M S Lifeன் பொருட்கள் குறித்தும், இயக்கம் குறித்தும் நீங்கள் முழுமையாக தெரிந்துகொண்டு, வாடிக்கையாளர்களின் சந்தேகங்கள் மற்றும், தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். திட்டங்கள் சரியாக செயல்பட்டனவா, வெற்றி அடைந்தனவா என்பதை வணிக தகவல்களைக்கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். • அந்தந்த பகுதிகளுக்கான வணிக இலக்கை அடைவது உங்கள் பொறுப்பு • நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்ய திறமையான வணிக அதிகாரிகள் மற்றும் விநியோக வலைப்பின்னல்களைக் கொண்டு ஏற்படுத்த வேண்டும் • விநியோகஸ்தர்கள், சில்லறை வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் சிறந்த நல்லுறவை ஏற்படுத்தி M S life ப்ராண்டை பிரபலப்படுத்த வேண்டும் • நிறுவனத்தின் கொள்கைகள் மற்றும் செயல்முறைகளையும், பொருட்கள் குறித்த முழு விபரங்களையும் நன்கு புரிந்து கொள்ளவேண்டும் • சந்தைகளுக்கு தவறாமல் விஜயம் செய்து அனைத்து வழிகளிலும் பூரணமாக செயல்பட்டுவிட்டோமா என்பதை அறிந்துகொண்டு போட்டியாளர்களின் நடவடிக்கைகளை புரிந்து கொள்ளவேண்டும் • வாடிக்கையாளர்களின் குறைகளை முழுமையாக புரிந்துகொண்டு நிவர்த்தி செய்ய வேண்டும் • துணை விற்பனை மேலாளருடன் கலந்து விற்பனை பெருக்கத்திற்கு தேவையான வழிமுறைகளை கையாண்டு செயல்படுத்தவேண்டும், இதற்கு மார்க்கெட்டிங் குழு உங்களுக்கு முழு ஆதரவு அளிக்கும் • கிடங்குகளுடன் தொடர்புகொண்டு சரக்குகளின் இருப்பு குறித்து பின்தொடர வேண்டும் • வணிக தகவல்களை சேகரித்து ஒப்பிட்டுப் பார்த்து சிஸ்டம் மற்றும் ஆவணங்களில் பதிவேற்ற வேண்டும்
விற்பனை அதிகாரி
• விற்பனை இலக்குகளை பெருக்குவதும் சில்லறை வலைப்பின்னலை விரிவுபடுத்துவதும் உங்களின் பொறுப்பாகும். • விற்பனை அதிகாரியாக, நீங்கள் இரண்டாம் நிலை விற்பனை இலக்குகளை அடைய வேண்டும். சந்தையில் MS Life நிலைப்பாட்டையும் ஊடுறுவலையும் விரிவுபடுத்தி, சில்லறை வியாபாரிகளை நிலைப்படுத்தியும் வியாபார வளர்ச்சிக்கு வழிவகுக்க வேண்டும் • MS Lifeன் பொருட்களின் விபரங்களையும் விற்பனை யுக்திகளையும் நன்றாக புரிந்துகொண்டு, வாடிக்கையாளர்களின் புகார்களை திருப்திகரமாக நிவர்த்தி செய்ய வேண்டும் • உங்களுக்கு அளிக்கப்பட்ட மாவட்டங்களில் விற்பனையை ஊக்குவிப்பிற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் • அளிக்கப்பட PJPSன் படி நடந்து, தினசரி அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் • உங்களுக்கு அளிக்கப்பட்ட மாவட்டங்களின் சந்தை விபரமறிந்து தகுதியான சில்லரை விற்பனை வியாபாரிகளை தேர்ந்தெடுத்து நமது தயாரிப்புகளை வாங்குமாறு ஊக்குவிக்கவேண்டும். • பொருட்களின் விவரங்களை நன்கு அறிந்துகொண்டு, தகுந்த வகையில் எடுத்துரைக்க வேண்டும் • விற்பனை வழிமுறையை நன்கு புரிந்து கொண்டு அதன்படி நடக்கவேண்டும் • வாடிக்கையாளர் திருப்திபெறும் வகையில் புகார்களை உடனடியாக நிவர்த்தி செய்யவேண்டும் • விற்பனை நிர்வாகிகளுடன் இணைந்து விற்பனையை பெருக்குவதில் பணியாற்ற வேண்டும் • POP மற்றும் POSல் ஊக்குவிப்பு தகவல்களை நன்கு விளங்கும்படி விளம்பரப்படுத்த வேண்டும் • தரவுத்தளத்தில் தற்போதைய மற்றும் வரக்கூடிய வாடிக்கையாளர்களின் தகவல்களை பதிவு செய்யவேண்டும் • டீலர்களுடன் சேர்ந்து விற்பனைக்கு துணை நின்று வரும் வாடிக்கையாளர்களை நமது தயாரிப்பை வாங்க ஊக்குவிக்கவேண்டும்.

விண்ணப்பம்

கார்ப்பரேட் அலுவலகம்
"ராமா டவர்", 5-4-83, டி.எஸ்.கே. சேம்பர்ஸ், ராணிகன்ச் பஸ் நிலையம் எதிரில் செகந்தராபாத்
வேலை நேரம்
திங்கள் முதல் சனி வரை: 10:00 - 19:00
தொலைபேசி
+91-40-40498000