கட்டுமான தொழில் இதர சார்புடைய தொழில்களை வளர்த்த விதம்
கண்ணோட்டம்
இந்தியா ஒரு வளர்ந்து வரும் பொருளாதார நாடு, இதில் கட்டுமான தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் கட்டுமான வளர்ச்சியை சிறியது முதல் பெரிய அளவில் நாம் கூர்ந்து கவனித்து வருகிறோம். 1940ல் இருந்ததை விட 2018ல் 20% வருடாவருடம் அதிக அளவில் நகர மாகியுள்ளது நம் நாடு
நகரமாயாமாகுதலின் காரணங்கள்
அடிப்படை வசதிகளை பெருக்குவதில் அரசு கொண்டுள்ள ஆர்வம்.
வளர்ச்சியின் பங்குதாரர்
மனை மற்றும் நிலம் சார்ந்த தொழில் சுயசார்புடைய தொழிலாக வளர்ந்து சிறப்பு கல்வித் தகுதி உடையவர்களுக்கும் அடிப்படைத் தகுதி உடையவர்களுக்கும் வேலைவாய்ப்பை அளித்து வருகிறது. இதனால் மனை மற்றும் நிலம் சார்ந்த தொழிலை ஆதரவளிக்கும் பிற தொழில்கள் கூட இதனுடன் சேர்ந்து வளர்ந்து வருகிறது. சிமெண்ட் ஆலைகள், TMT கம்பிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், பணியாட்கள், சப்ளையர்கள், ஆர்க்கிடெக்டுகள், வடிவமைப்பாளர்கள்,திட்டமிடுபவர்கள் மற்றும் பலர் இவர்களுடன் வளர்ந்து வருகிறார்கள். அரசு தரமுடன் தயாரிப்பு நடைபெறுவதற்கு தகுந்த விதிகளையும் தரநிலைகளையும் நிர்ணயித்து வருகிறது. நாளடைவில் இந்த விதிகளை அணைத்து சார்ப்பு கம்பெனிகளும் பின்பற்ற வேண்டும் என்பதில் ஐயமில்லை.
TMT கம்பிகள்
TMT கம்பிகள் கட்டுமான தொழில்நுட்பத்தின் பரிமாணத்தை பெரிதும் மாற்றி வருகிறது. அதன் கேளிக்கையான செயலாக்கத்தினால், பலகைகளாக, பீம்களாக, தூண்களாக, இன்னும் பல வடிவமைப்புகளாக உருவாக்க எளிமையாக இருக்கின்றன.
TMT கம்பிகள் பல தரங்களில், சிறிய இல்லங்களுக்கும், மத்திய தர வியாபார கூடங்களுக்கும், மிகப்பெரிய அளவிலான, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கும்,அத்தியாவசியமான, கட்டுமான மூலப்பொருளாக விளங்குகிறது. மிகவும் நியாயமான விலை நிர்ணயத்துடன் வருவதால், சிறிய இல்லங்கள் கட்டுபவர்களுக்கு பயனுள்ள வகையில், பாதுகாப்பு அளிக்கக்கூடிய ஒரு பொருளாக விளங்குகிறது.
மற்றும் தகுதிகள்:
1. Fe 415, நெருப்பு மற்றும் பூகம்பம் எதிர்ப்புத்திறன் கொண்டது
2. Fe 550, கடல் மற்றும் நீர் நிலைகளின் அருகில் கட்டமைப்பதற்கு ஏற்றது. இது துரு எதிர்ப்புத்தன்மை கொண்டது.
3. Fe 600, கம்பிகள், விமானநிலையங்கள் மற்றும் வானளாவிய கட்டிடங்களுக்கு ஏற்றதாகும்
இந்த பல்வேறுபட்ட தரவகைப்பாட்டினால் TMT கம்பிகள் கட்டுமானத் தொழிலின் முதுகெலும்பாகத் திகழ்கிறது